2020 டிசம்பர் மாத வீட்டு லொத்தர் வெற்றியாளர் பரிசீலனை....
சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்தம் வீட்டு லொத்தர் அதிஸ்டம் மூலம் இரண்டு லட்சம் அதிஸ்ட பணமாக கிடைக்கும். இப்பணத்தில் வெற்றியாளர் புதிதாக வீட்டினை நிர்மானித்துக் கொள்வதற்கும், வீட்டினை திருத்தி அமைப்பதற்கும், புதிதாக காணியை கொள்வணவு செய்வதற்கும் பயன்படுத்த முடியும். இதன் அடிப்படையில் கோறளைப்பற்று, கோரளைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலகத்தில் 2020 ஆண்டின் டிசம்பர் மாதத்திற்கான சமுர்த்தி வீடமைப்பு லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றி பெற்ற பயனாளிகளின் ஆவணங்களை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி முகாமையாளர் கிட்ணன் புவிதரன் அவர்களால் 2021.03.10ம் திகதி அன்று கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து பரீட்சிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேற்படி பிரதேச செயலகத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment