சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம்......
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுக்கான மாதாந்த மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட மகாநாட்டு மண்டபத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி அ.பாக்கியராஜா தலைமையில் 23.02.2021 அன்று நடைபெற்றது.
இக் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கும் 29 சமுர்த்தி வங்கிகளின் முகாமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அவர்களுடன் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. தற்போது சமுர்த்தி வங்கிகளின் கணணி மயமாக்கல் மற்றும் முன்னேற்றம் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கலந்துரையாடப்பட்டன. 2020ம் ஆண்டில் சமுர்த்தி வங்கிகளின் இலாபம் பற்றியும் இதன் முன்னேற்றம் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. 7% வட்டியில் அறநெனு கடன் வழங்கல் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் உடனடியாக வழங்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. மற்றும் மின்சாரம், குடிநீர், துப்பரவு தொடர்பாக புதிதாக 4% வீததத்தில் வழங்கப்படவுள்ள சமுர்த்தி ஆலோகா கடன் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. மற்றும் சமுதாய அடிப்படை அமைப்பின் மூலம் அமைக்க்படவுள்ள சிறிய அளவிலான சூரியமின் உற்பத்தி பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இக் கூட்டத்திற்கு மாவட்ட சிரேஸ்டசமுர்த்தி முகாமையாளர் G.F.மனோகிதராஜ், மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவுக்கான முகாமையாளார் நிர்மலாதேவி கிரிதரன், மாவட்ட சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment