பெண் சமுர்த்தி பயனாளிக்கு விற்பனையகம் ஒன்றை அமைத்துக் கொடுக்க அரசினால் ஏற்பாடு...!

 பெண் சமுர்த்தி பயனாளிக்கு  விற்பனையகம் ஒன்றை அமைத்துக் கொடுக்க அரசினால் ஏற்பாடு...

சமுர்த்தி நிவாரணம் பெறும் அல்லது குறைந்த வருமாணம் பெறும் பெண் தொழில் முயற்சியாளர்களை தெரிவுசெய்து அவர்களுக்கான வதிவிட விற்பனையகம் ஒன்றை அரசினால் அமைத்துக் கொடுக்க இருப்பதால்இ தகுதியானவர்கள் உங்கள் பகுதி சமூர்த்தி உத்தியோகத்தரை சந்தித்து விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து கொடுங்கள்.

கீழே குறிப்பிடப்படும் அடிப்படைத் தகவல்கள்  விண்ணப்பப்படிவங்கள் கூறுதல் வேண்டும்.

👉சமுர்த்தி பயனாளி குறைந்த வருமானம் பெறும் பெண்  ஒருவராக இருத்தல் வேண்டும்.

👉தனக்கு  சொந்தமான (அறுதி உறுதியுடன்) காணி அல்லது அங்கீகரிக்கக் கூடிய காணி உறுதிப்பத்திரம் உடைய நிரந்தரமான வதிவிடத்தை  உடையவராக இருத்தல் வேண்டும்.

👉விற்பனையகம் ஒன்றை அமைப்பதற்கு பொருத்தமான இடம் அல்லது நிரந்தரமான வீடற்றவராக இருத்தல் வேண்டும்.

👉தங்கள் கிராம உத்தியோகத்தர் பிரிவின்  உற்பத்தியாளர்களது  பொருட்களை விற்பனை செய்வதற்கு இணங்குபவராக இருக்க வேண்டும்.

கருத்திட்டத்தின் பொருட்டு குடும்பங்களை தெரிவுசெய்யும் கிராமிய குழுவின் அமைப்பானது (உத்தேசமானது)

👉பிரதேசத்திலுள்ள விகாரைகளில் விகாராதிபதி மற்றும் ஏனைய சமய தலைவர்கள்.

👉உள்ளூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள்.

👉கிராம உத்தியோகத்தர்.

👉சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்.

👉பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்.

👉விவசாய அபிவிருத்தி ஆராய்ச்சி உத்தியோகத்தர்.

👉குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்.

👉மக்கள் அமைப்புக்களின் தலைவர்கள்.

மேற்படி கிராமிய குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களில் இருந்து தகுதியான பயனுகரிகளை ஆகக்கூடியது 05 பேர் மாத்திரம் என்ற வகையில் தெரிவு செய்து பிரதேச ஒழுங்கமைப்பு குழுவிற்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

பின்னர் கிராமிய ஒருங்கிணைப்பு குழுவினால் கிராமத்திற்கு இருவர் வீதம் என்ற வகையில் அதில் தகுதியான இரண்டு பெயர் தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்து அங்கீகாரம் வழங்கப்படும்.

Comments