கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கம் ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கி கணணி மயமாக்கல் அங்குரார்பணம்......
கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கம் ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கி கணணி மயமாக்கல் அங்குரார்பணம்......
சமுர்த்தி வங்கிகள், சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி சங்கங்கள் தற்போது கணணி மயமாக்கல் பணிகள் நாடு பூராவும் துரிதமாக நடைபெற்று வரும் இவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 10வது சமுர்த்தி வங்கியாக ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கி 16.02.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி திட்டம் சுமார் 20 வருடங்களாக செயற்பட்டு வருகின்ற போதிலும் வங்கி பணிகள் சற்று தாமதமான செயற்பாடு உடையதாகவே காணப்பட்டது. அதற்கமைய பணிகளை மிக துரிதமாக மக்கள் சேவையாற்ற வேண்டும் எனும் நோக்குடன் சகல சமுர்த்தி வங்கிகளையும் கணணி மயமாக்குதல் பணி தற்போது துரிதமாக நடைபெறுகின்றது. இதன் அடிப்படையில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கிழக்கு சமுர்த்தி வங்கி மற்றும் கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கள் 16.02.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வானது கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரதேச செயலாளர் S.H.முசாமில் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்களும், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் M.S.பஸீர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் G.F.மணோகிதராஜ் அவர்களும், சமுர்த்தி வங்கி பிரிவின் முகாமையாளர் திருமதி.நிர்மலாதேவி கிரிதரன் மற்றும் சமுர்த்தி முயாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் இக்கணணி மயமாக்கல் பணியில் அர்பணிப்புடன் செயற்பட்ட உத்தியோகத்தர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment