ஒதுக்கி வைத்ததை மீண்டும் உரிய இடத்தில் வைப்போம்....
ஒதுக்கி வைத்ததை மீண்டும் உரிய இடத்தில் வைப்போம் இது இனி ஒன்றுக்கும் உதவாது என ஓரங்கட்டி வைக்கப்பட்ட ஒரு தொகுதி பாவித்து உடைந்த மரத்தளபாடங்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக மீள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் உரிய இடத்திற்கு வந்துள்ளது.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவிற்கு சொந்தமான இந்த பாவனைக்கு உதவாது ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு தொகுதி மரத்தளபாடங்களை திருத்தி மீண்டும் புதிதாக பிரதேச செயலக சமுர்த்தி பிரிவிற்கு பாவனைக்கு வந்துள்ளது. ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ. தவராஜா அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம். ஐ. ஏ. அஸீஸ் அவர்களின் வழி காட்டுதலின் வங்கி முகாமையாளர் பி.எம். சிஹான் அவர்களின் மேற்பார்வையில் இச் செயற்பாடு செய்து முடிக்கப்பட்டுள்ளது. இச் செயற்பாட்டின் மூலம் தரமான மரத்தளபாடம் மீள கிடைத்ததுடன் ஒரு சமுர்த்தி பயனாளிக்கு தொழில் வாய்ப்பாகவும் அமைந்ததுடன் மன நிறைவும் அடைகின்றது. எனவே நாமும் உடைந்ததை நொறுக்காமல் உடைந்ததை மீள் கட்டுமானம் செய்து ஒதுக்கி வைத்ததை உரிய இடத்தில் வைப்போம் இச் செயற்பாட்டில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா மற்றும் சமுர்த்தி பிரிவிற்கு எமது வாழ்த்துக்கள்.
Comments
Post a Comment