சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்.....

 சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்.....

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையாக முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்களுக்கான மாதாந்த மீளாய்வு கூட்டம் கடந்த 10.02.2020 புதன் கிழமை மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு 14 பிரதேச செயலகத்தில் இருந்து தலைமையக முகாமையாளர்கள் மற்றும் கருத்திட்ட முகாமையாளர்களும் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில்  பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன மின்சாரம் இல்லாத குடும்பங்களின் விபரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், கிராமத்தில் இரண்டு இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை சமுர்த்தி பயனுகரிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களிடம்  இருந்து உடனடியாக தெரிவு செய்து பற்றியும் கலந்துரையாடப்பட்டது, நாடுபூராவும் இரண்டுலட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் கிராமத்தில் 15 குடும்பங்களை தெரிவு செய்வதற்கான வேலைத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டன, கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட மனைபொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்ட முன்னேற்றம் பற்றியும் கலந்துரையாடப்பட்டது, சௌபாக்கியா ஆறு லட்சம் மற்றும் இரண்டு லட்சம் வீட்டுத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டன, மலசலகூடங்கள் அமைத்தல் , சிப்தொர, சமுதாய அடிப்படை அமைப்புக்களை புதுப்பித்தல் தொடர்பாகவும் நிதி விடயம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இக் கூட்டத்தில் உரையாற்றி மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் மிக முக்கியமாக மின்சாரம் இல்லாதோர் விபரம் உடனடியாக தகவல்களை அறிக்கையிடுமாறும், 200000  குடும்பங்களை மேம்படுத்தல் வேலைத்திட்டம் மற்றும் 25000 இளம் பெண் முயற்சியாளர்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை துரிதப்படுத்தி சரியான முறையில் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் செயற்படுமாறும் அறிவுருத்தியதுடன் இவ் அணைத்து விடயங்களும் கிராமத்தில் உருவாக்கப்படும் கிராமிய குழுக்களின் சிபாரிசின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட வேண்டும்  எனவே இச்செயற் திட்டத்தை மிகவும் சரியாகவும்  நேர்த்தியாகவும் செயற்படுத்துமாறு கூறினார்.

இம்மாதாந்த கூட்டத்தில்  மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் எஸ்.எம். பஸீர், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மணோகிதராஜ் சமுர்த்தி வங்கி பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதரன் மற்றும் மாவட்ட சமுர்த்தி கணக்காய்வு உத்தியோகத்தர்கள், மாவட்ட கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.அலி.அக்பர், ஆகியோர் கலந்து கொண்டனர். 






Comments