வெல்லாவெளி,மண்டுர் சமுர்த்தி வங்கிகள் கணணிமயமாக்கப்பட்டு திறந்து வைப்பு.....

 வெல்லாவெளி,மண்டுர் சமுர்த்தி வங்கிகள் கணணிமயமாக்கப்பட்டு திறந்து வைப்பு.....

நாட்டில் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளும் கணணி மயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நாடுபூரவும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஒன்பது சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு 05.02.2021 திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெல்லாவெளி சமுர்த்தி வங்கி, மண்டுர் சமுர்த்தி வங்கி மற்றும் போரதீவு பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சம் (மகாசங்கம்) என்பன 05.02.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருணாகரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

 போரதீவு பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் செல்வி.இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருனாகரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன் போது உரையாற்றுகையில் வெல்லாவெனி சமுர்த்தி வங்கி பல கஸ்டங்களில் மத்தியில் இப்பணியை முடித்திருப்பதை நான் அறிய கூடியதாக இருக்கின்றது. அதே போல் மண்டுர் சமுர்த்தி வங்கியும் குறுகிய காலத்தில் இப்பணியை செவ்வனே செய்து முடித்துள்ளார்கள். இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கின்றது நான் இப்பிரதேசத்தில்  பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது இவ்வங்கிகளின் ஆரம்ப நிகழ்விலும் கலந்து கொண்டது. இன்று இவ்வங்கிகள் இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளதை பார்க்கும் போது இங்கு பணிபுரியும் உத்தியோகத்தர்களின் அயராத உழைப்பே இதற்கு காரணமாக இருப்பதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியாது எனவே அப்பணிகளை இக்காலகட்டத்தில் முடிவுற்ற அனைவருக்குத்தும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா தமதுரையில் இலங்கையில் 1074 சமுர்த்தி வங்கிகள் இயங்குகின்றன இதில் தற்போது 135 சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது இதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றுடன் ஒன்பது சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்ததுடன் போரதீவு பற்று சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கமும்  (மகாசங்கம்) இன்று திறந்து வைக்கப்பட்டதும் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் எஸ்.எம். பஸீர் அவர்களும் போரதீவு பற்று பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மணோகிதராஜ் அவர்களும், சமுர்த்தி வங்கி பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதரன் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் போது வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் சோளன் அறுவடையும் செய்யப்பட்டதுடன் சிறப்பாக பணியாற்றி சகலருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் இறுதியில் கலந்த கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

 































 

 


Comments