73வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு......
இலங்கையின் 73வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் ஒரு தொகுதி பாடசாலை உபகரணங்கள் வறிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் நிதியில் இருந்து ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 85 வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 04.02.2021 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்கள் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஓட்டமாவடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் வீ. தவராஜா அவர்கள் கலந்து கொண்டு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ.சி. அகம்மட் அப்கர் அவர்களும் பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment