73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டு மாவட்ட செயலகத்தில் சிரமதான பணிகளும் மரம் நடுகையும்......

 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டு மாவட்ட செயலகத்தில் சிரமதான பணிகளும் மரம நடுகையும்......

இலங்கையின் 73வது சுதந்திரதினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சமுர்த்தி பிரிவினரால் சிரமதான பணிகளும் மரம் நடுகை நிகழ்வுகளும் இடம் பெற்றன. மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கே.கருனாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை அரச அதிபரே சிரமதான பணிகளை ஆரம்பித்து வைத்ததுடன் மர நடுகையிலும் ஈடுபட்டார். 

 இதன் போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்களும் மர நடும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் சிரமதான பணிகளையும் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எஸ்.எம். பஸீர் அவர்களும், மாவட்ட சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மணோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.அலி.அக்பர்  அவர்களும் மாவட்ட சமுர்த்தி வங்கி பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதரன் அவர்களும் சிரேஸ்ட முகாமையாளர் ஜெயராஜா அவர்களும் மாவட்ட சமுர்த்தி கணக்காய்வு பிரிவினர், முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி எத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.














Comments