ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா ஏழு வீடுகளும் பயனாளிகளிடம் கையளிப்பு......
வறிய மக்களின் வீடில்லா பிரச்சனையை தீர்ப்பதற்காக சமுர்த்தி திணைக்களம் மக்களின் பங்களிப்புடன் வீட்டினை நிர்மானித்துக் கொள்ள சௌபாக்கியா திட்டத்தின் மூலம் இரண்டு லட்சம் ரூபாயை வழங்குகின்றது. இதில் குறித்த பயனாளிகள் தனது பங்களிப்புடன் வீட்டினை நிர்மானித்து முடித்துள்ளார்கள். ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் ஏழு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது இந்த ஏழு வீடுகளையும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி.நிகாரா மௌயூத் குறித்த பயனாளிகளிடம் அன்மையில் கையளித்துள்ளார். இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.கணேசமூர்த்தி, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திருமதி.A.M.நிகாரா, சமுர்த்தி முகாமையாளர் திருமதி.குமுதினி சூசைதாசன், சமுர்த்தி அபிவிருத்தி உதவியாளர் U.L.M.அசீஸ் மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.பூபாலப்பிள்ளை வலய உதவியாளர் S.M.ரகீம் பிரிவு உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment