சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்.....

 சமுர்த்தி மாதாந்த மீளாய்வு கூட்டம்.....

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையாக முகாமையாளர்களுக்கான மாதாந்த மீளாய்வு கூட்டம் கடந்த 27.01.2020 புதன் கிழமை மாவட்ட செயலகத்தில் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு 14 பிரதேச செயலகத்தில் இருந்தும் தலைமையக முகாமையாளர்கள் கலந்து கொண்டனர்.

 இக்கூட்டத்தில்  பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன மின்சாரம் இல்லாத குடும்பங்களை இனம்கண்டு அவர்களின் தகவல்களை திரட்டும் வேலைத்திட்டம், கிராமத்தில் இரண்டு பெண் தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கான வியாபார நிலையங்களை  அமைப்பதற்கான வேலைத்திட்டம், நாடுபூராவும் இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம், சமுர்த்தி வங்கி ஊடாக 7% வீததத்தில் கடன் வசதிகளை   வழங்கும் வேலைத்திட்டடம் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், 2020/2022ம் ஆண்டுக்கான சிப்தொர புலமைபரில் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.

 கடந்த கால மீளாய்வு பற்றி கலந்துரையாடப்பட்ட போது ஆறு லட்சம் சௌபாக்கிய வீட்டுத்திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன், இரண்டு லட்சம் சௌபாக்கியா வீட்டுத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், மலசல கூடங்கள் அமைக்கப்பட்டது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

 இக் கூட்டத்திற்கு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் எஸ்.எம். பஸீர் அவர்களும், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மணோகிதராஜ் அவர்களும், மாவட்ட சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் அலி அக்பர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.





Comments