மட்டு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் ஒரு முன் மாதிரியாக திகழ்கின்றது........
மட்டு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகத்தில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம் ஒரு முன் மாதிரியாக திகழ்கின்றது........
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கம் கணணிமயமாக்கப்பட்டு 27.01.2021 அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்ட போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடுபூராவும் சமுர்த்தி வங்கிகள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கள் கணணிமயமாக்கப்பட்டு வருகின்றது அதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏழு சமுர்த்தி வங்கிகளும் ஒரு சமுதாய அடிப்படை அமைப்பு சங்கமும் கணணிமயமாக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 27.01.2021 களுவாஞ்சிக்குடி பிரதேச செயலளர் சிவப்பிரியா வில்வரெத்தினத்தின் தலைமையில் நடைபெற்ற சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கமும் கல்லாறு சமுர்த்தி வங்கியும் கணணிமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந் மேற்கண்டவாறு கூறினார். களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் இயங்கும் மூன்று சமுர்த்தி வங்கிகளும் அதனை மேற்பார்வை மேற்கொள்ளும் சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கமும் கணணிமயமாக்கப்பட்டு முதல் தடவையாக சகல பணிகளையும் பூர்த்தி செய்து ஒரு முண்ணுதார பிரதேச செயலகமாக திகழ்வதாக குறிப்பிட்டு பிரதேச செயலாளரையும் பாராட்டினார். மேலும் குறிப்பிடுகையில் கடந்த இரண்டு வருடங்களாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தில் பல முன்னேற்றங்களை தாம் காண்பதாகவும் சிறப்பான செயற்பாடுகளை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் தற்போது மேற் கொள்வதாகவும் பாராட்டியதுடன் இக்கொவிட் காலத்திலும் இப்பணிகைளை முடித்த சகலருக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்கள் தனதுரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக ஒரு சமுர்த்தி வங்கிச்சங்கம் கணணிமயமாக்கப்பட்டு திறந்து வைப்பதில் தாம் மட்டற்றமகிழ்ச்சி அடையவதாகவும் இதே போல் மிகுதியாகவுள்ள 13 சமுர்த்தி வங்கிச்சங்கங்களும் தம்மை முன்னிலைப்படுத்தி கணணிமயமாக்கல் நடவடிக்கையில் ஈடபடுமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் எஸ்.எம். பஸீர் அவர்களும் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ஜீ.பே.மணோகிதராஜ் அவர்களும், சமுர்த்தி வங்கி பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதரன் மற்றும் சமுர்த்தி முயாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் நினைவு பரில்களும் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment