ஒரு பிரதேச செயலகத்திற்கு ஏழு சௌபாக்கியா வீடுகள்......

 ஒரு பிரதேச செயலகத்திற்கு ஏழு சௌபாக்கியா வீடுகள்......

சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக வறிய மக்களின் வீடில்லா பிரச்சனையை குறைப்பதற்காக ஒவ்வொரு  பிரதேசசெயலகங்களுக்கும் 07 வீடுகளை நிர்மானிப்பதற்காக சமுர்த்தி திணைக்களம் இரண்டு லட்சம் ரூபாயை சமுர்த்தி பயனுகரி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு  வழங்கி வீடுகள் நிர்மானிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒரு வீட்டை அமைப்பதற்கு இரண்டு லட்சம் ரூபாக்களை தான் சமுர்த்தி திணைக்களம் வழங்கும் மிகுதி பணத்தினை குறித்த பயனுகரி தன் பங்களிப்பாக இடுவதன் மூலம் இவ்வீட்டை அமைத்துக் கொள்ள முடியும். 

 இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 14 பிரதேச செயலகங்களுக்கும்  07 வீடுகள் என 98 வீடுகள் நிர்மானிக்கப்பட்டுள்ளன எனவும் இப்பணிகள் மிகவும் சிறப்பாக முன்னெடுக்க்ப்படுவதாகவும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அன்மையில் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் சௌபாக்கியா வீட்டினை திறந்து வைத்த போது தெரிவித்தார்.

 மேலும் தெரிவிக்கையில் சமுர்த்தி திட்டம் வெறுமனே சமுர்த்தி நிவாரனத்தை மாத்திரம் வழங்காமல் வறிய மக்களும் அவர்களின் முயற்சி மூலம் முன்னேற்றம் அடைந்து தாமாகவே தம் வாழ்வை கொண்டு செல்ல பல செயற்திட்டங்களை செய்து வருகின்றது இதன் அடிப்படையில் தான் இவ்வீட்டுத்திட்டம் அமைக்கப்படுவதுடன் மக்களின் பங்களிப்பு இருந்தால் தான் அதன் பெறுமதி அவர்களுக்கு தெரியும் ஆகவே இவ்வீடுகளை நிர்மானிப்பவர்கள் மிகவும் சந்தோசமாக இவ்வீடுகளில் வசிப்பார்கள் எனவும் குறிப்பிட்டார்.

 மேலும்  பல சௌபாக்கியா வீட்டத்திதிட்டத்தின் வீடுகள் அன்மையில் திறந்து வைக்கப்பட்டு சமுர்த்தி பயாளிகளிடம் கையளிக்கப்பட்டது.











Comments