நாட்டில் இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் மட்டுவில் ஆரம்பம்.....

 நாட்டில் இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் மட்டுவில் ஆரம்பம்.....

நாட்டில் வாழும் இரண்டு லட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வேலைத்திட்டத்தை  மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.பி.பந்துல திலகசிறி தெரிவித்தார்.

2021ம் ஆண்டில் இரண்டு லட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் 12.01.2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர்களுக்குமான கூட்டத்தில் இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.பி.பந்துல திலகசிறி மேற்கண்டவாறு கூறினார். இதன் போது அரசாங்க அதிபர் தமதுரையின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் சகல சமுர்த்தி  வங்கிகளும் கணணி மயமாக்கல் வேலைகளை மிக விரைவாக முடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

 இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.பி.பந்துல திலகசிறி உரையாற்றும் போது 2021ம் ஆண்டில் இரண்டுலட்சம் சமுர்த்தி குடும்பங்களை மேம்படுத்துவதுடன் இருபத்தையாயிரம் பெண்களை மேம்படுத்தி அவர்களையும் தங்கள் சுயநிர்னயத்துடன் வாழவும் ஐயாயிரம் மாதிரி கிராமங்களை உருவாக்குவதுமே அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்தார். ஒவ்வொரு கிராமத்திலும் இயங்கும் சமுதாய அடிப்படை அமைப்புக்களை அடிப்படையாக கொண்டே இம்முன்று செயற்பாடுகளும் நடைபெறவுள்ளதாகவும் நாடு பூராவும் தற்போது முப்பதாயிரம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் செயற்படுவதாகவும் குறிப்பிட்டு இவ்வருடம் அரசாங்கம் சமுர்த்தி திட்டத்திற்கு அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில் நிச்சயமாக சமுர்த்தி உத்தியோகத்தாத்களின் வெற்றிடங்கள் கூடிய விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இரண்டு வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டு தம்மால் திறந்து வைக்கப்பட்டதை பாராட்டியதுடன் மற்றைய வங்கிகள் மாசி மாத இறுதியில் முடிவுறுத்துமாறும் குறிப்பிட்டர்.

இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு எருவில் சமுர்த்தி வங்கி மற்றும் மாங்காடு சமுர்த்தி வங்கிளை கணணி மயமாக்கி திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் கணணி மயமாக்கல் பணியிளை 2020.12.31 முன்பாக முடித்த ஆறு வங்கிகளுக்கு ஒலி அமைப்பு கருவிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா, இலங்கை திணைக்களங்களின் பணிப்பாளர்கள், பிரதிப்பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.















Comments