எனக்கு விடை கொடுத்த ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் ...
இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன் என்னை அன்புடன் அரவனைத்த பிரதேச செயலகம் தான் ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் இவ்வேழு வருடத்தில் இரண்டு சமுர்த்தி வங்கிகள் ஐந்து கிராமசேவகர் பிரிவுகளை சந்தித்தவன் தான் நான்.கண்ட முதல் நாளே என்னை அன்புடன் வரவேற்று என் விருப்பமே தன் விருப்பமென கூறி பணிசெய்ய தூண்டியவர் தான் அன்றும் இன்றும் என்றும் என் மனதில் பிரதேச செயலாளர் என்றால் நிழலாடும் என் பாசத்திற்குரிய திரு.உதயசிறிதர் ஐயா அவர்கள். தூரம் என்றாலும் துயருறுவோருக்கு பணிசெய்வதே நாம் பெற்ற இன்பம் அதற்கமைய மட்டக்களப்பின் எல்லை கிராமமான புல்லுமலை கிராமம் எனக்கு வழங்கப்பட்டது. அடிப்படை வசதிகளற்ற அக்கிராமத்துடன் கோப்பாவெளி கிராமமும் பதில் கடமைக்கு என் தலையில் தினிக்கப்பட்டது இக்கிராமங்களுக்குரிய சமுர்த்தி வலய வங்கியாக கரடியநாறு திகழ்ந்தது. பணிக்கு புதியவர் என்றாலும் கண்டிப்போடு கூடிய அன்பை பகிர்ந்தவர் தான் அன்றைய சமுர்த்தி முகாமையாளர் திரு.திபாகரன் அவர்கள் மூன்றரை வருடங்கள் என்னால் முடிந்த சேவைகளை புல்லுமலை கோப்பாவெளி கிராமங்களில் செய்து அங்கிருந்து எனக்கு மற்றுமொரு கிராமத்தின் பணி செய்ய அனுமதித்தவர் தான் என் வாழ்வில் மறக்க முடியாத சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திரு.ஜெயராஜா ஐயா அவர்கள். வேப்பவெட்டுவான் கிராமத்தில் பாலர்சேனை என்ன மாவடி ஓடை என்ன எல்லா இடங்களையும் சுற்றித்திரிந்து ஒன்றறை வருடங்கள் முழு மூச்சாக சேவையாற்றினேன் சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் என கூறப்பட்ட போது நானே விரும்பி பெற்றுக் கொண்ட கிராமம் தான் தன்னாமுனை மற்றும் மயிலம்பாவெளி கிராமங்கள் இன்று வரை மக்கள் மத்தியில் சிறந்த சேவையாற்றிய பின்பு தான் எனக்கு விடை கொடுக்கின்றது ஏறாவூர் பற்று பிரதேச செயலகம். முடிந்தவரை இறுதி காலம் வரை இப்பிரதேச செயலகத்தில் பணியாற்ற வேண்டும் என்கின்ற ஆசை என் மனதில் இருந்து கொண்டே வந்தது காலத்தின் தேவையையும் இறைவனின் சித்தமும் என்னை மாற்றம் காண செய்துள்ளது.
ஏழு வருடத்தில் பல எண்ணிலடங்கா வேலைத்திட்டங்கள் மக்களின் பங்களிப்புடன் என்னால் மேற் கொள்ளப்பட்டன அவை மறக்கவும் முடியாது யாராலும் மறுக்கவும் முடியாது
புல்லுமலை மற்றும் கோப்பாவெளி கிராமத்தில் புகைத்தல் எதிர்ப்பு வாரத்தில் நான்கு லட்சம் ரூபாக்களுக்கு மேல் சேமித்து 35 வறிய சமுர்த்தி குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கியது. சமுர்த்தி செய்திகளை தாங்கிய மாற்றம் எனும் பத்திரிக்கையை வெளியிட்டது அங்கு வாழும் முதியவர்களையும் மகளீர்களையும் வருடம் தோரும் கௌரவித்ததுடன் புலமைபரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் புதிய சமுர்த்தி முத்திரைகளை வழங்கி மக்களின் முன்னேற்றத்திற்காக பல சமுர்த்தி கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தமை என் வாழ் நாளில் மறக்க முடியாத தருனங்கள்.
வேப்பவெட்டுவான் கிராமத்தில் வாழ்வாதாரத்தை முன்னெற்றமடைய கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தமை 2018ம் ஆண்டு சித்திரை புதுவருட சேமிப்பில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிக சேமிப்பு செய்த கிராமமாக வேப்பவெட்டுவான் கிராமம் திகழ்தமை மற்றும் முதியவர்களையும் மகளீர்களையும் வருடம் தோரும் கௌரவித்ததுடன் புலமைபரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை பல்கலைகழகம் சென்ற மாணவர்கள் எயர்தரம் கற்க தெரிவு செய்ய்ப்ட்ட மாணவர்களை கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் சமுர்த்தி சங்கங்களின் தலைவர்களையும் கௌவித்தமை என் வாழ் நாளில் மறக்க முடியாத தருனங்கள்.
தன்னாமுனை மற்றும் மயிலம்பாவெளி கிராமங்களில் எந்த சமுர்த்தி சங்கங்களும் செய்யாத சாதனையை எனது மக்கள் செய்தனர் மகளீர் தினத்தில் இரண்டு வருடங்களாக இரத்ததான நிகழ்வை பெண்களே முன்னின்று நடாத்தியமை பாராட்டத்தக்க விடயம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களின் கௌரவிப்பு செய்யப்பட்டதுடன் 2019ம் ஆண்டு மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்திரை புதுவருட சேமிப்பில் முதன்மை இடத்தினை மயிலம்பாவெளி கிராமம் பெற்று சாதனை படைத்தது. சமுர்த்தி நிவாரணம் பெறும் 30 பாடசாலை மாணவர்களுக்கு மாகாணம் மற்றும் தேசிய மட்டத்தில் சாதனை படைத்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டமை சமுர்த்தி நிவாரணம் பெறுவோரின் தகவல்கள் கணணி மயமாக்கும் முயற்சியும் மேற் கொண்ட போது இடையில் நிறுத்தப்பட்டன. என் வாழ் நாளில் மறக்க முடியாத தருனங்கள்.
ஐந்து கிராமங்களிலும் சிறு குழுக்கள் மீள் கட்டமைப்பு செய்யப்பட்டதுடன் சமுதாய அடிப்படை அமைப்புக்களும் சீரமைக்கபபட்டு உரிய உரிய ஆவணங்கள் பொறுப்பேற்ற உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இன்று (07.01.2021) சகல பணிகளும் முடிவுற்று ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலய வங்கியில் ஆவணங்கள் ஒப்படைக்க்பட்ட இச்சந்தர்பந்தில் எனக்கான விடுவிப்பு கடிதம் என்கையில் கிடைத்துள்ளது நாளை நான் புதிய இடத்தில் புதிய பணியை மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்கவுள்ளேன்.
இத்தருனத்தில் என்னுடன் சேவையாற்றிய 5 கிராம மக்களுக்கும் குறிப்பாக என்னுடன் இன்று வரை சிறந்த நற்பினை ஏற்படுத்தி கொடுத்த சமுர்த்தி உத்தியோகத்தர்களான திரு.தவநீதன் மற்றும் என்னுடன் பணியாற்றிய சகல சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
பாலசிங்கம் ஜெயதாசன்
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்.
மாற்றம் ஒன்றே மாறாதது.......
புல்லுமலை - கோப்பாவெளியில்
Comments
Post a Comment