2021ம் ஆண்டிற்கான சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களை புதுப்பித்தல்......
சமுர்த்தி திட்டத்தின் மிகப்பெரிய சக்தியாக தற்போது திகழ்வது தான் இந்த சமுதாய அடிப்படை அமைப்புக்கள் இவ்வமைப்புக்களில் அங்கத்தவர்களாக தம்மை இணைத்துக் கொள்பவதன் மூலமே சமுர்த்தி திட்டத்தின் மூலம் கிடைக்கும் வரப்பிரசாதங்களை ஒரு சமுர்த்தி பயனுகரி பெற்றுக் கொள்ள முடியும். அந்த வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சகல சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களும் புதுப்பித்தல் மேற்கொண்டு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டும் பதிவினை மேற் கொள்ள வேண்டும்.
நாடுபூராகவும் சுமார் முப்பதாயிரம் சமுதாய அடிப்படை அமைப்புக்கள் இருக்கின்றன இவ்வமைப்புக்களை எதிர்வரும் 31.01.2021 முன்பதாக புதுப்பித்து கொள்ள வேண்டும். தற்போது நாடு பூராவும் ஆரம்பிக்கப்பட்டவுள்ள இரண்டு லட்சம் குடும்பங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கும், இருபத்தி ஐயாயிரம் குடும்பங்களை பெண்கள் ஊடாக மேம்படுத்துவதற்கும் இவ் சமுதாய அடிப்படை அமைப்பில் அங்கத்தவர்களாக இருக்கும் பட்டத்திலேயே இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்பு உள்ளது.
எனவே இப்புதுப்பித்தல் பதிவுகளுக்கா ஏற்பாடுகளை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராமங்கள் தோறும் மேற் கொள்ளும் சந்தர்பத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவின் பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவில் 2021ம் ஆண்டிற்கான பதிவுகளை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.சக்கூர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளுக்கான 2021ம் ஆண்டிற்கான பதிவு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment