காத்தான்குடி சமுர்த்தி பயனாளிக்கு சௌபாக்கியா வீடு.....

 காத்தான்குடி சமுர்த்தி பயனாளிக்கு  சௌபாக்கியா வீடு..... 

(M.H.M அன்வர்)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால்  பிரதேசத்திற்கு ஒரு வீடு அமைத்துக் கொடுப்போம்  எனும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 167/A கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் ஒரு சமுர்த்தி பயனாளிக்கு   வீடு அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு  11.12.2020 இடம்பெற்றது.

இப் பயனாளிக்கு சமுர்த்தி திணைக்களத்தால் 6 இலட்சம்  ரூபாய் வழங்கப்படுவதுடன் 4 இலட்சம் ரூபாவை தனது பங்களிப்பாக இட்டு  பத்து லட்சம் ரூபாவில்  இவ்வீட்டை பூர்த்தி செய்ய வேண்டும். இந்நிகழ்வில்  காத்தான்குடி பிரதேச செயலாளர் உ. உதயசிறிதர் தலைமையில் இடம்பெற்றது இதன் போது காத்தான்குடி பிரதேச செயலக தலைமையக முகாமையாளர்  பத்மா ஜெயராஜ், வலய சமுர்த்தி முகாமையாளர் A.L.Z. பஹ்மி, மௌலவி பௌஸ் பலாஹி, சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் M. அன்ஸார். பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அனீஸா ரவூப், கிராம சேவை உத்தியோகத்தர் மபாஸா சுல்பிகார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




Comments