வறியவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்கும் சமுர்த்தி....
சமுர்த்தி நிவாரணம் பெறும் சமுர்த்தி குடும்பத்திற்கு சமுர்த்தி திட்டம் மூலம் பல நன்மைகள் வரப்பிரசாதமாக கிடைத்து வருகின்றன. வீட்டு லொட்டரி, சமூக காப்புறுதி, மாதாந்தம் கட்டாய சேமிப்பு என பல நன்மைகள் கிட்டுகின்றன. இதில் அதிஸ்ட சீட்டிலுப்பில் மாதமா மாதம் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் அதிஸ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் வீட்டு மனை அபிவிருத்தியை மேற்கொள்ள உதவிகளும் வழங்கப்படுகின்றன. இந்த வகையில் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி வீடமைப்பு சீட்டிழுப்பில் வெற்றி பெற்ற ஓட்டமாவடி 208/B கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த அ. க. சியானா என்பவருக்கு காணி கொள்வணவு செய்யப்பட்டு அதற்கான உறுதிப்படத்திரத்தை ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்கள் பயனாளியடம் கையளித்தார். இதன் போது உரிய காணியை பார்வையிட்டு அதனை பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் M.B.M. அப்பாஸ் அவர்களும் வழங்கி வைத்தார்.
Comments
Post a Comment