சமுர்த்தி நிவாரணம் சீட்டிலுப்பில் வீடு திருத்தம்.....

 சமுர்த்தி நிவாரணம் சீட்டிலுப்பில் வீடு திருத்தம்.....

சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனுகரிகளுக்கு மாதாந்த அதிஸ்ட சீட்டிலுப்பில் வெற்றியாளருக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வீடு அமைத்தல், வீடு திருத்தம், காணி கொள்வனவு போன்ற விடயங்களுக்கு இந்நிதியை பயன்படுத்த சமுர்த்தி பயனுகிகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படும் இதன் அடிப்படையில்  2020 மார்ச் மற்றும் மே மாதங்களில் கோறறைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவில் வெற்றி பெற்ற பயனாளிகளின் வீடுகள் புதிதாக கட்டப்பட்டும் புனரமைக்கப்பட்டும்  2020.12.16ம் திகதி பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோறறைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் M.I.A.அஸீஸ் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.L.M.சரீப் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.ஐயூப்கான் கிராம உத்தியோகத்தர் M.S. சஜ்மி  அபிவிருத்தி உத்தியோகத்தர் ரிஸானா றிஸ்மின் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான M.M.M.சக்கூர் V.T.பாகிரா ஆகியோர் கலந்து கொண்டனர்.







Comments