சமுர்த்தி வங்கிகள் கணணி மயப்படுத்தலுக்கான பயிற்சி பட்டறை.....

 சமுர்த்தி வங்கிகள் கணணி மயப்படுத்தலுக்கான பயிற்சி பட்டறை.....

(எஸ்.நவா)

தற்போது நாடு முழுவதும் உள்ள சமுர்த்தி வங்கிகளை கணணி மயமாக்கல் பணிகள் மிக விரைவாக முன்னெடுக்கப்பட்டு இவ்வருட முடிவுக்குள் நிறைவேற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வரும் இவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும்  சமுர்த்தி வங்கிகளை கணணி மயப்படுத்தல் வேலைத்திட்டம் நடைபெற்று வருகின்றது இக்கணணி மயமாக்கல் தொடர்பான பயிற்சி நெறி அன்மையில் வங்கி உதவி முகாமையாளர்கள்  மற்றும் கணணி பயிற்சியாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிநெறி  மாவட்ட ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வானது  மாவட்ட  சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் கி.பே.மனோகிதராஜ் தலைமையில் இடம்பெற்றது இதன் வளவாளர்களாக  ரீ.பவளேந்திரன் மற்றும் த.சுரேஸ் ஆகியோர் விரிவுரையையும் பயிற்சிகளையும் வழங்கி இருந்தனர். இந்நிகழ்வில்  மாவட்ட சமுர்த்தி வங்கிப் பிரிவின் முகாமையாளர் நிர்மலா கிரிதரன் கலந்து கொண்டனர்.




Comments