கள நிலைமைகளை பார்வையிட்டார் சமுர்த்தி பணிப்பாளர்.......
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்துப்படும் வேலைத்திட்டங்களை களத்தில் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி. அ. பாக்கியராஜா.இதன் போது தற்போது நடைபெற்று வரும் சமுர்த்தி வங்கிகளின் கணணிமயமாக்கல் பணிகளையும், செனபாக்கியா வேலைத்திட்டங்களையும், சமுர்த்தி பயனாளிகளுக்கான மலசல கூடங்கள் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு பயனாளிகளுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இதன் போது ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவினால் அமுல்படுத்தும்
சமுர்த்தி சௌபாக்கியா விசேட வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை பார்வையிட்டதுடன் சமுர்த்தி பயனாளி தெரிவு மிகவும் பொருத்தமானதாக இருந்ததையும் கூட்டிக்காட்டி இருந்தார்.
இதன்போது மாவட்ட செயலக தலைமையக முகாமையாளர் திரு.கி.பே.மனோகிதராஜ் மற்றும் மாவட்ட செயலக வங்கி மற்றும் குறு நிதியத்திற்கு பொறுப்பான முகாமையாளரான திருமதி.நி.கிரிதராஜ் ஆகியோரும் வருகை தந்திருந்தனர், இதன் போது ஏறாவூர் நகர் பிரதேச செயலக தலைமையக சமுர்த்தி முகாமையாளர் திரு.கே. கணேசமூர்த்தி அவர்களும் கள நிலவரங்களை நெறிப்படுத்தியதுடன் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அஸீஸ் அவர்களும் உடனிருந்து குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment