மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கத்தில் நானும் ஆரம்பகால உறுப்பினர்......

 மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கத்தில் நானும் ஆரம்பகால உறுப்பினர்......

மட்டக்களப்பு கிரிக்கெட் சங்கம் முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது நானும் முதல் செயலாளராக நியமிக்கப்பட்டேன் என M.மனோகரன் தன் நீங்காத நினைவுகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

 கிரிக்கெட் மற்றும் ஹொக்கி விளையாட்டுகளின் மூலம் தன்னை உலகிற்கே அறிமுகப்படுத்தியவர் தான் மாத்தளை மனோகரன் ஆவார். 1983ம் ஆண்டு கலவரத்தின் பின் இவர் மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்டு மட்டக்களப்பு கிரிக்கெட் வளர்ச்சிக்காக உழைத்தவர் இவர் தற்போது தன் வீடு பிள்ளைகள் என வாழ்ந்து வரும் இவரை அன்மையில் சந்திக்கும் ஒரு வாய்ப்பு கிட்டியது மிக சுவையான சம்பவங்களையும் நம்ப முடியாத பல விடயங்களையும் எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

 மாத்தளை சென் தோமஸ் கல்லூரியில் கல்விகற்ற போது தன் திறமையால்  1972/73 கிரிக்கெட் அணித்தலைவராக செயற்பட்டதாகவும் தான் ஒரு பந்துவீச்சாளராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டதாகவும் குறிப்பிட்ட இவர் அதன் பின் மாத்தளை சென் தோமஸ் கல்லூரியில் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டதாகவும் மாத்தளை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை தாம் உருவாக்கியதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

 தன் திறமையை கண்டு அந்த காலத்தில் இராணுவ அணியிலும், பொலிஸ் அணியிலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு அழைத்த போதிலும் தனது பெற்றோர் விருப்பம் தெரிவிக்காததால் தன் வேலைவாய்ப்பும் பறிபோனதாக குறிப்பிட்டார்.

இதன் பின் லங்கா போசலின் லிமிட்டட்டில் பணிநிமித்தம் இணைந்து கொண்டு அந்நிறுவனத்திற்காக கிரிக்கெட் விளையாடியதாகவும் குறிப்பிட்டார். தழிழ் யூனியன் அணிக்காக தம்மை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்குபற்றியதாகவும் குறிப்பிட்ட இவர்

1981/82ம் காலப்பகுதியில் தமது ஹொக்கி விளையாடும் திறமையைக் கண்டு இந்தியாவுடனான ஹொக்கி போட்டியில் தாம் பங்குபற்றியதாகவும் இதன் போது அப்போதைய பாரதப்பிரதமர் திருமதி.இந்திராகாந்தி தம்மை பாராட்டியதாகவும் குறிப்பிட்டார்.

அதன் பின் 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் தாம் குடும்பத்துடன் மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்து தன் தொழிலை மேம்படுத்தி கொண்டதாகவும் அதன் போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒரு கிரிக்கெட் சங்கத்தை அமைக்கும் நோக்கில் அப்போதைய மட்டக்களப்பின் பிரபல வர்த்தகரான அமரர்.நவரெட்னம் அவர்களுடன் கலந்துரையாடி மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தை 1989ம் ஆண்டு ஆரம்பித்தாகவும் குறிப்பிட்டார்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் முதல் தலைவராக அமரர்.நவரெட்னம் அவர்களும் செயலாளராக திரு.மனோகரன் அவர்களும் பொருளாளராக அமரர்.ராஜன் சத்தியமூர்த்தி அவர்களும் தெரிவு செய்யப்பட்டதாகவும் தற்போது வரை பாவிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இலச்சனையை கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் அங்கத்தவரும் பிரபல ஆசிரியருமான திரு.கோவிந்தராஜா அவர்களால் வடிவமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

1989/90 காலப்பகுதியில் முதல் கடினபந்து சுற்றுப்போட்டியை இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் கண்கானிப்பில் மட்டக்களப்பு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடாத்தியதாகவும் போதிய வசதிகள் இல்லாததால் பல சிரமங்களுக்கு மத்தியில் இப்போட்டிகளை நடாத்தியதாகவும் குறிப்பிட்டார். இதன் பின் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பங்களிப்பில் சிவானந்தா மைதாத்தின் பிச் புனரமைக்கப்பட்டதாகவும் இதற்கான புத்துமண் சித்தான்டியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவித்தார். சிவானந்தா விளையாட்டு மைதானம், கோட்டைமுனை விளையாட்டு மைதானம், வெபர் மைதானம், ஏறாவூர்  போன்ற இடங்களில் அன்றைய காலத்தில் வலைப்பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். தற்போது அவை திருத்தம் செய்யப்படாமல் காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.

 அதன் பின் வெபர் மைதானத்தை கிரிக்கெட் மைதாமாக்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட் சங்கத்தால் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அம்மைதானத்தை பார்வையிடுவதற்காக இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதிகள் மட்டக்களப்பிற்கு வருகை தந்து தன்னையையும் திரு.நவரெட்னம் அவர்களையும் சந்தித்தாகவும் ஆனால் இதை நடைமுறைபடுத்துவதில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அது தடைப்பட்டதாகவும் இச்செயற்பாடு அன்றே நடந்திருந்தால் இன்று ஒரு முதல் தர கிரிக்கெட் மைதானமாக வெபர் மைதானம் இப்போது மட்டக்களப்பில் இருந்திருக்கும் என மிக வேதனையுடன் தெரிவித்தார்.

 

அக்கால கட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீரர்கள் தம் திறமையை வெளிக் கொணர்ந்ததாகவும் ஆனால் புற்தரை மைதானங்கள், பயிற்றுவிப்பாளர்கள் இல்லாத காரணத்தால் பல தடைகளை எதிர்கொண்ட போதிலும் ஒரு சில வீரர்களை தாம் இனம் கண்டு அவர்களை கொழும்பில் உள்ள கழகங்களில் இணைப்பதற்கான முயற்சியினை தாம் மேற் கொண்டதானவும் குறிப்பிட்டார். அதில் ஒருவரை தாம் குறிப்பிட்டே ஆக வேண்டும் என கூறிப்பிட்டு கூறினார் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தை சேர்ந்த இராஜதுரை சஞ்சீவன் தான் அவர்  இவரின் திறமையை கண்டு அவரின் பெற்றோரிடம் தாம் அனுமதி கேட்டதாகவும் அப்போதைய யுத்த சூழ்நிலை காரணமாகவும் கல்வி பாதிப்படையும் எனும் காரணத்தினாலும் அவரின் பெற்றோர்கள் அவரை அனுப்ப சம்மதிக்கவில்லை ஆனால் அவர் மட்டும் அப்போதே வந்திருந்தால் இன்று இலங்கை அணியில் ஒரு தலைசிறந்த வீரராக இருந்திருப்பார் என நினைவு கூர்ந்தார்.

 எனவே தனது  காலத்தில் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அதன் பின் தான் சற்று ஒதுங்கி தற்போது ஓய்வெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். இப்போதும் கிரிக்கெட் பற்றி எண்ணம் தன் உள்ளே இருப்பதானவும் குறிப்பிட்டு கண் கலங்கினார்...........






Comments