LPLல் தொடரில் ஏன் மட்டக்களப்பை சார்ந்த ஒரு அணியை யாரும் உருவாக்கவில்லை?

இன்னும் 5 நாட்களில் இலங்கையில் முதல் தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிறீமியர் லீக் Lanka Premier League (LPL) தொடரில் 5 அணிகள் களமிறங்கவுள்ளதை நாம் யாவரும் அறிவோம். பல போராட்டத்தின் மத்தியில் இச் சுற்றுப்போட்டியை நடாத்துவதா? இல்லையா? என பல முடிவுகள் எட்டப்பட்டன பல திகதிகளில் மாற்றங்களும் நிகழ்ந்தன பலர் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த போதிலும் இச்சுற்றுப்போட்டியை நடாத்துவதென முடிவெட்டப்பட்டுள்ளது. இதில் யாழ்பாணத்தை சார்ந்து Jaffna Stallions எனும் ஒரு அணியும் களம் காணுகின்றது. இவ்வணியை யாழ் மண்ணை பிறப்பிடமாக கொண்டு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் அவ்வுள்ளங்கள் தம் மண்ணின் இளம் வீரர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு இவ்வணியை உருவாக்கி வெற்றி பாதையில் செல்ல தயாராகி உள்ளனர். முதலில் அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 இந்த LPLபோட்டியானது இலங்கையில் நடாத்தப்படுவது தொடர்பாக பல மாதங்களாக பலராலும் பேசப்பட்டு வந்த ஒரு விடயமாகும் இதில் கண்டி, கொழும்பு, தம்புள்ள, காலி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களை சார்ந்த அணிகள் பங்குபற்றும் போது ஏன் மட்டக்களப்பை சார்ந்து ஒரு அணியை உருவாக்க யாரும் முன்வரவில்லை இதற்கான காரணம் என்ன? பண பலத்தால் தான் உருவாக்க முடியுமா? அல்லது செல்வாக்கு மூலமாக தான் உருவாக்க முடியுமா? அல்லது புலம்பெயர்ந்த நாடுகளில் வசித்தால் தான் முடியுமா? இதற்கு யார் முடிச்சு போடுவது.

Jaffna Stallions அணியை பொறுத்தவரை யாழ் மண்ணின் மூன்று மைந்தர்கள் இப்போட்டியில் பங்குபற்ற வைக்க வேண்டும் என்பதற்காகவே  இவ்வணி அவர்களை தெரிவு செய்து அவ்வணியில் இணைத்துள்ளது இது முதல் கட்டமானதால் முடிந்தவரை இவ்விளம் வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என்பதிலும் ஐயப்பாடு இல்லை ஆனால் அவ்வணியை பொறுப்பேற்றவர் கூறும் போது யாழ்ப்பாணத்திலோ அல்லது முல்லலைத்தீவிலோ அல்லது கிளிநொச்சியிலோ ஒரு சர்வதேச மைதானத்தை அமைத்து எமது மண்ணின் வீரர்களை கிரிக்கெட் வளர்ச்சிக்கு மேலோங்குவதற்காகவே தாம் இச் செயற்பாட்டை செய்துள்ளதாக மிக ஆணித்தரமாக கூறுகின்றார்.

 அன்மைக்காலத்தில் மட்டக்களப்பை சார்ந்த இரு இளம் வீரர்கள் தம் அசுர திறமையை இராணுவ பிறிமியர் லீக்கில் விளையாடி சாதனை படைத்திருந்திருந்ததை நாம் அனைவரும் அறிவோம் ஆனால் அவர்களால் இப்போட்டியில் பங்குபற்ற எந்த வாய்ப்பும் சந்தர்ப்பமும் கிட்டவில்லை இது எமக்கு கிடைத்த ஒரு துரதிஸ்டமே. ஏன் எமது மட்டக்களப்பு சார்ந்த ஒரு அணியை புலம்பெயர்ந்து வாழும் எம்முள்ளங்கள் ஒன்றினைந்து உருவாக்கி இருந்தால் இன்னும் பல வீரர்களை நாம் இனம் காண்பது மாத்திரமன்றி அவர்களின் வாழ்க்கையை வெளியுலகத்திற்கும் காட்டி இருக்கலாம் தவற விட்டு விட்டோம் தவறுக்கு பொறுப்பு கூறுபவர்களை கண்டு பிடிப்போம்.

இது யார் விட்ட தவறோ எங்கு பிழையுள்ளதோ நாம் அறிவோம் மட்டக்களப்பில் கிரிக்கெட் வளர்ச்சி சற்று மந்தமாகவே காணப்படுகின்றது இன்னமும் தேசிய அணிக்காகவோ அல்லது முதல் தர போட்டிகளில் பங்குபற்றுவதற்காகவோ எம்மவர்கள் தயார்படுத்தலில் அல்லாமல் இன்னமும் அசமந்த போக்கை மட்டக்களப்பு மாவட்டம் செய்து வந்தால் நம்மை .......... என்றே பலரும் கூறுவார்கள். இம்முறை விட்ட தவறை அடுத்த வருடம் செய்யாதீர்கள். கருத்துக்களை பகிருங்கள்........

 

Comments