Jaffna Stallions அணியில் மட்டு வீரர் தேனு......

 Jaffna Stallions  அணியில் மட்டு வீரர் தேனு......

இலங்கையில் இம்மாதம் 26ம் திகதி  LPL போட்டியில் ஆரம்பமாகவுள்ளன. இதில் Jaffna Stallions அணியும் ஒரு முக்கிய அணியாக பங்குபற்றவுள்ளது. இவ்வணிக்கு இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரோரா அணித்தலைவராகவும் முன்னாள் இலங்கை அணியின் வீரரான திலின கண்டம்பி பிரதான பயிற்றுவிப்பாளராகவும் செயற்படவுள்ளனர். இவ்வணியில் தற்போது மூன்றுச தமிழ் வீரர்கள் இனைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவராக மட்டக்களப்பில் இருந்து ரெட்ணராஜா தேனுரதன் அவர்களும் இனைத்துக் கொள்ளப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். 

இவரை இவ்வணி தாம் பயிற்சியில் ஈடுபடும் போது வலைப்பயிற்சி பந்து வீச்சாளராகவும் (Net Bower), களத்தடுப்பாளராகவும் ஈடுபடுத்துவதற்காக  தற்போது தெரிவு செய்துள்ளதாக அறியப்படுகின்றது. இவர் இராணுவ அணிக்காக தற்போது விளையாடி வருவது குறிப்பிடத்தக்க விடமாகும். அன்மையில் இராணுவ அணிகளிடையோ நடைபெற்ற இராணுவ பிரிமிய லீக் போட்டியில் சிறப்பாக விளையாடி சிறந்த களத்தடுப்பாளருக்கான விருதினையும் ரெட்னராஜா தேனுரதன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர் இச்சுற்றுப்போட்டியில் ஆபாரமான ஒரு பிடியெடுப்பினை கைப்பற்றி அனேகரின் பார்வையிலும் ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருந்தார். மட்டக்களப்பில் இருந்து ஒரு வீரர் முதல் தடவையாக நடைபெறும் LPL போட்டியில் தன் பெயரை ஏதோ ஒரு வகையில் உள் வாங்கப்பட்டு பதிவிட்டுள்ளதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

 எது எப்படியோ நிச்சயம் அடுத்த LPL  போட்டியில் மட்டக்களப்பு சார்பாக ஓர் அணி உருவாக வேண்டும் எம் மண்ணின் வீரர்கள் பலரும் இப்போட்டியில் பங்கு பற்ற வேண்டும்.



Comments