தனபால் ஞாபகார்த்த இரத்ததான நிகழ்வு.....

 தனபால் ஞாபகார்த்த இரத்ததான நிகழ்வு.....

மட்டக்களப்பு சிவானந்தா விளையாட்டு கழகம் அமரர்.சாமித்தம்பி தனபால் அவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வை எதிர்வரும் 28.11.2020 அன்று சனிக்கிழமை சிவானந்தா மைதான கேட்போர் கூடத்தில் நடாத்தவுள்ளது இவ் இரத்ததான நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு சிவானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.முரளிதரன் அழைத்துள்ளார்.

அமரர்.சாமித்தம்பி தனபால் சிவானந்தா விளையாட்டு கழகம் சார்பாக கிரிக்கெட் விளையாட்டில் தன் திறமையை வெளிக்கொனர்ந்த ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் தற்போது இருந்திருந்தால் இலங்கையில் இன்று ஆரம்பமாகும் LPL போட்டியில் மட்டக்களப்பு சார்பாக ஒரு வீரராக களம் கண்டிருப்பார். அந்த வீரரின் ஞாபகார்த்தமாகவே இந்த இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக சிவானந்தா விளையாட்டு கழகத்தின் தலைவர் திரு.முரளிதரன் தெரிவித்தார் நாமும் இனைந்து ஒரு துளி இரத்தத்தில் ஓர் உயிர் காக்க உதவுவோம்.


Comments