ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி செளபாக்கியா வீடமைப்பு திட்டம் ஆரம்பம்....
(அஸீஸ்)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தால் ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் மிகவும் வறிய சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனாளிகளில் இருந்து தெரிவு செய்து அவர்களின் குடியிருப்பு தேவையினை பூர்த்தி செய்வதற்காக செளபாக்கியா வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் தற்போது நாடு பூராவும் செயற்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிலுள்ள மீராகேணி கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் க.மு.ஹபீபா உம்மா என்பவருக்கு இவ்வீடமைப்பு அதிஸ்டம் கிட்டியுள்ளது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூலம் 600000 ரூபாய் மானியமாக வழங்கப்படுவதன் மூலம் வீடமைப்பு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. இத் திட்டத்தின் மூலம் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீடு அமையப்பெறவுள்ளது. இதற்கான பூர்வாங்க அடிக்கல் நாட்டும் வைபவம் 18.11.2020 அன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜுத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர் M.H.F.சிஹானா அவர்களும் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் S.A.றஹீம் மற்றும் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்களும் பிரதேச செயலக முகாமைத்துவ பணிப்பாளர் S.A.M.பஸீர் அவர்களும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் M.கபீர் முகம்மட்,சமூக சேவை உத்தியோகத்தர் கருத்திட்ட முகாமையாளர், வங்கி முகாமையாளர் கிராம உத்தியோகத்தர், பொருளதார உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர். U.L.M.அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment