வறிய மக்களுக்கு மலசலகூடங்கள் அமைக்க சமுர்த்தி உதவி....
(ஜெயா)
நாட்டில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடனும் ஒரு வீட்டிற்கு ஒரு மலசலகூடம் எனும் செயற்திட்டத்தின் மூலமாக மலசலகூடங்கள் இல்லாத சமுர்த்தி பயனுகரி குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக் கொள்வதற்காக இலங்கை சமுர்த்தி திணைக்களம் நன்கொடையாக 30000 ஆயிரம் வழங்கி ஊக்குவித்துள்ளது.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சமுர்த்தி பயனுகரிகளின் வீட்டிற்கும் ஒரு மலசலகூடம் எனும் தொனியில் கிராமத்தில் மலசலகூடங்கள் இல்லாத சமுர்த்தி பயனாளி குடும்பங்களை தெரிவு செய்து அதில் முதல் கட்ட பயனாளிகளுக்கான மலசலகூடங்களை அமைக்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை சமுர்த்தி திணைக்களத்தால் 30000 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கி முதல்கட்ட பணிகள் தற்போது நாடுபூராவும் இடம் பெற்று வருகின்றன. இவர்களுக்காக தற்போது முதல் கட்டமாக 15000 ரூபாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் மலசல கூடம் அமைப்பதற்கான மேலதிக செலவை பயனாளிகளின் பங்களிப்புடன் செயற்படுத்த வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது 815 சமுர்த்தி பயனாளிகளுக்கு மலசல கூடங்கள் அமைப்பதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் நாட்டில் தற்போது வீட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டம் மிக வேகமாக செயற்படும் இவ்வேளையில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சமுர்த்தி குடும்பங்களை உருவாக்கவே சமுர்த்தி திணைக்களம் இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் இதற்கான நிதியினை சமூக பாதுகாப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். இவ்வேலைத்திட்டம் தற்போது முடிவுற்றிருக்க வேண்டும் ஆனால் கொவிட்-19 காரணமாக தாமதடைந்ததையும் சுட்டிக்காட்டி தற்போது முதல் கட்ட பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment