மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர் சங்கத்தினர்.....
(எம்.எச். எம்.அன்வர்)
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களுக்கும் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்க மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு 18.11.2020 அன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது இதன் போது இதற்கான நடவடிக்கைகளை பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி தாம் மேற்கொள்வதாக அரச அதிபர் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பின்போது மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் அ.பாக்கியராஜா அவர்களும் பிரசன்னமாயிருந்தார். இச்சந்திப்பில் அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவர் என். ரவீந்திரகுமார் செயலாளர் உட்பட சங்க பிரதிநிகள் பரலும் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment