ஆரையம்பதி சமுர்த்தி வங்கி மட்டுவில் முதல் நேரடி கணணிமயமாக்கல் வங்கியாகும்......

 ஆரையம்பதி சமுர்த்தி வங்கி மட்டுவில் முதல் நேரடி கணணிமயமாக்கல் வங்கி......


(ஜெயா)

இலங்கை பூராகவும் உள்ள சமுர்த்தி வங்கிகளை கணணி மயமாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 சமுர்த்தி வங்கிகள் தற்போது கணணி மயமாக்கல் வேலைத்திட்டத்தில் செயற்பட்டு வரும் இவ்வேளையில் ஆரையம்பதி சமுர்த்தி வங்கி தற்போது முழு கணணி மயமாக்கல் செயற்பாட்டில் தலைமையகத்தின் நேரடி பார்வையின் கீழ் செயற்படுவதற்கான ஆரம்ப நிகழ்வு இன்று 03.10.2020 ஆரையம்பதி சமுர்த்தி வங்கியில் இடம் பெற்றது.

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்கள் கலந்து கொண்டு கணணி மயமாக்கல் பணியை ஆரம்பித்து வைத்தார். இதன் போது மண்முனை பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமச்சிவாயம் அவர்களும் மண்முனை பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ராசிக் பரீட் சித்தி பாத்திமா அவர்களும் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி.பி.கலைவாணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 இதன் போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா அவர்கள் இக்கணணி செயற்பாட்டை மிக விரைவாக செயற்படுத்திய ஆரையம்பதி சமுர்த்தி வங்கி முகாமையாளர் கார்த்திகேசு நவரஞ்சன் அவர்களுக்கு பாராட்டை தெவித்ததுடன் இதற்காக அயராது உழைத்த வங்கி வலய சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் பாராட்டுவதாக தெரிவித்தார். சுமார் இரண்டு மாத காலத்தில் இப்பணிகளை செய்து முடிக்கப்பட்டதுடன் மட்டக்களப்பின் முதல் நேரடி கணணி மயாமாக்கல் சமுர்த்தி வங்கியாக இவ்வங்கி திகழ்வதாகவும் குறிப்பிட்டார். மற்றைய வங்கிகள் கூடிய விரைவில் கணணி மயமாக்கல் பணிகள் முடிவுறும் என கூறிப்பிட்டதுடன் தற்போதைய அசாதாரண சூழ்நிலையை தகுந்தவாறு யாவரும் கடைப்பிடிக்க வேண்டியதையும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2013 ம் ஆண்டு ஏற்கனவே இரண்டு சமுர்த்தி வங்கிகள் கணணி மயமாக்கப்பட்டிருந்தாலும் நேரடி தொடர்பு அற்றதாகவே காணப்படுகின்றது குறுகிய காலத்தில் அவ்வங்கிகளும் நேரடியாக செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்போது 9 பயனாளிகளுக்கு கணணி மயமாக்கப்பட்ட வங்கியூடாக பதிவுகள் மேற் கொண்டு சமுர்த்தி வங்கி புத்தகங்கள் கையளிக்கப்பட்டது.











Comments