இனி மட்டு மாவட்டத்தில் நுண்கடன்களை முன்னெடுப்பதற்கு தடை அரச அதிபருக்கு குவியும் வாழ்த்துக்கள்......


இனி மட்டு மாவட்டத்தில் நுண்கடன்களை முன்னெடுப்பதற்கு தடை அரச அதிபருக்கு குவியும் வாழ்த்துக்கள்.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் திட்ட மீளாய்வு கூட்டம் 08.09.2020 அன்று  மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் காலை 10.00மணிக்கு மாவட்ட செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது போது இவ் உத்தரவை தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நுண் கடன் திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தனியார் நிறுவனங்களுக்கு கண்டிப்பான உத்தரவினை வழங்கியதுடன்
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுண் கடன்களை மீளப்பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திரமே மட்டக்களப்பு  மாவட்டத்தில் முன்னெடுக்க முடியுமே தவிர புதிய கடன்கள் வழங்க கூடாது என்றும் இதனை பிரதேச செயலாளர்கள் கண்கானித்து அறிக்கையிடப்படல் வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இச் செய்தி மட்டக்களப்பு மாவட்டதில் குறித்த ஓர் இரு தினங்களில் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு செய்தியாக வருகின்றது. பலரும் தமது முகநூல்களிலும் இணையதளங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்த வன்னம் உள்ளார்கள்.

 








Comments