ஏறாவூர் பற்று பிரதேச செயலக ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகர் ஆலய சங்காபிஷேகம்......
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி சித்திவிநாயகர் ஆலய சங்காபிஷேகம் இன்று 11.09.2020 அன்று மிக சிறப்பாக நடைபெற்றது. அன்மையில் புதிதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக வளாகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீ வலம்புரி சித்தி விநாயகர் ஆலய கர்மாரம்பம் 28.08.2020 திகதி அன்று நடைபெற்று 29.08.2020 திகதி அன்று எண்னெய்காப்பு சாத்தப்பட்டு 30.08.2020 திகதி அன்று கும்பாபிசேகம் செய்யப்பட்டது. அதன் பின் இன்று சங்காபிஷேகம் செய்யப்பட்டது இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் நா.வில்வரெட்னம் மற்றும் பிரதேச செயலக பணியாளர்கள் கலந்து கொண்டது விசேட அம்சமாகும் இதன் போது இவ்வாலயம் இறைபணியில் நின்று அருள் தொண்டு புரிந்த சிவஸ்ரீ துரை ஆனந்த சங்கர குருக்கள் மற்றும் அவருக்கு துணை புரிந்த குருக்களுக்கும் நினைவுச் சின்னங்களும் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment