பத்துலட்சம் மனைப் பொருளாதார வேலைத்திட்டம் முன்னெடுப்பு......
(ஜெயா)
அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலில் பத்து லட்சம் மனை பொருளாதார அலகுகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தில் வீட்டுக்தோட்டங்களை உருவாக்கி தமது தேவையை தாமே பூர்த்தி செய்வதுடன் மேலதிக உற்பத்தியை விற்பனை செய்வதன் மூலம் நஞ்சற்ற போசாக்குள்ள உணவுகளை நாமே உற்பத்தி செய்து பயனடையும் வேலைத்திட்டத்திற்கான பயிற்சி நெறி ஏறாவூர் நகர் மற்றும் ஏறாவூர் பற்று செயலக பிரிவுக்குட்பட்டவர்களுக்கு 29.09.2020 அன்று நடைபெற்றது.
ஏறாவூர் நகர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஏறாவூர் நகர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.A.H.சிஹான தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி, ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் S.A.M.பஸீர், ஏறாவூர் நகர் பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் A.M.நிகாரா, ஏறாவூர் பற்று பிரதேச செயலக கருத்திட்ட முகாமையாளர் M.கலாதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து தெரிவித்த ஏறாவூர் நகர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் M.A.H.சிஹான அவர்கள் பத்துலட்சம் மனை பொருளாதார வீட்டுத்தோட்டத்திற்கான நாற்று மேடை அமைப்பாளர்களுக்கான இப்பயிற்சக்கானி வேலைத்திட்டம் ஒரு சிறந்த செயற்பாட்டு வேலைத்திட்டமாக நடைபெறவுள்ளதாகவும் இதற்கு சமுர்த்தி பயனாளிகளை உள்வாங்கி அவர்களை ஊக்கப்படுத்துவதற்கு மேற் கொள்ளும் இவ்வேலைத்திட்டத்தால் கூடிய பயன் பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
இதன் போது உரையாற்றிய ஏறாவூர் நகர் பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி அவர்கள் 14022 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டமாக நாற்று மேடை அமைக்கும் பணிகளுக்கான செயற்பாடே இன்று நடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.
இப்பயிற்சி நெறியை ஏறாவூர் நகர் விவசாய திணைக்கள அதிகாரி M.H.முர்சிதா சிறின் நெறிப்படுத்தி பயிற்சிகளை வழங்கி இருந்தார். இப்பயிற்சி நெறியில் ஏறாவூர் நகர் , ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களும் நாற்றுமேடை பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment