தன்னாமுனையில் சப்ரி ஹமக் வேலைத்திட்டம் ஆரம்பம்......
(ஜெயா)
கிராமங்களுக்கிடையிலான சப்ரி ஹமக் வேலைத்திட்டம் 30.09.2020 ஆகிய இன்று தன்னாமுனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக தன்னாமுனை அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரனிதா வித்தீபன் இன்று தெரிவித்தார்.
கொவிட் காரணமாக தடைப்பட்டிருந்த இப்பணி இன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் இவ்வேலைத்திட்டத்திற்கென தன்னாமுனை கிராமத்தில் இருந்து சென் ஜோசப் வீதி மற்றும் சென் ஜோசப் 3ம் குறுக்கு வீதியும் தெரிவு செய்ய்ப்பட்டு கொங்கிறீட் இடப்படவுள்ளதாகவும் இதற்கான ஆரம்ப பணிகளே இன்று ஆரம்பிக்கப்பட்டதாகவும் இவற்றை ஏறாவூர் பற்று பிரதேச செயலக தொழில் நுட்ப உத்தியோகத்தர் திரு.உருத்திரநாதன் நேரடியாக பார்வையிட்டதாகவும் இவ்வீதிகளை முழுமையாக கொங்கிறீட் இடுவதற்காக தன்னாமுனை கிராம அபிவிருத்தி சங்கமும் தம் பங்களிப்பை செய்ய முன்வந்துள்ளதாகவும் தன்னாமுனை அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரனிதா வித்தீபன் தெரிவித்தார்
Comments
Post a Comment