சமுர்த்தி அமைச்சரை சந்தித்த சமுர்த்தி உத்தியோகத்தர் மன்றம்.....

 சமுர்த்தி அமைச்சரை சந்தித்த சமுர்த்தி உத்தியோகத்தர் மன்றம்.....



புதிதாக  சமுர்த்தி வதிவிட பொருளாதார நுண் நிதிய சுயதொழில் வியாபார அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு பயன்பாட்டு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரான  கௌரவ ஷெஹான் சேமசிங்க. அவர்களை அகில இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராச்சி உத்தியோகத்தர் மன்றம் 04.09.2020 அன்று சந்தித்து கலந்துரையாடினர்.

 சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அவர்களை இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராச்சி உத்தியோகத்தர் மன்ற செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான S.D.ஜெகத் குமார அவர்களும் மன்ற தலைவரான திரு.கீர்த்தி சிறி அவர்களும் பொருளாளர் ஜனாப் பாஷில் அன்வர் அவர்களும் மாவட்ட இலங்கை சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் விவசாய ஆராச்சி உத்தியோகத்தர் மன்ற தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.

 இக்கலந்துரையாடலில் பட்டதாரியான சமுர்த்தி உத்தியோகத்தர்களில் இருந்து சமுர்த்தி முகாமையாளர்களின் நியமனம், வெற்றிடமாக உள்ள கிராமசேவகர் பிரிவிற்கு புதிய சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நியமனம், சமுர்த்தி உத்தியோகத்தர்களின் சம்பள விடயம், மற்றும் பதில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பணவு பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன், புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி இராஜாங்க அமைச்சருக்கு  வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

 இச்சந்திப்பு 04.09.2020 அன்று கொழும்பில் அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.




Comments