மட்டக்களப்பில் 29 சமுர்த்தி வங்கிகளும் கணணிமயமாக்கப்படவுள்ளது.....

 மட்டக்களப்பில் 29 சமுர்த்தி வங்கிகளும் கணணிமயமாக்கப்படவுள்ளது.....

மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி பயாளிகளுக்கான சேவையை வழங்கும்  29 சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிகளும் கணனி மயமாக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக 29 சமுர்த்தி சமுதாய அடிப்படை  வங்கிகளும் 14 சமுர்த்தி மகா சங்கங்களும் செயற்பட்டு வருகின்றன. இச் சமுர்த்தி வங்கிகளின் பணிகளை விரைவு படுத்தவும் கணக்குகளை ஒழுங்காகா பேனவும்  சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம்  வங்கிச் செயற்பாடுகளையும் மகா சங்கங்களின் செயற்பாடுகளையும் கணனிமயமாக்கி  வருகின்றது. 

இதன் முதல் கட்டமாக 2013ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளான புளியந்தீவு சமுர்த்தி வங்கி  2425 பயனாளிகளையும் கல்லடி சமுர்த்தி வங்கி 4760 பயனாளிகளையும் உள்வாங்கி இக்கணணி வேலைத்திட்டம் ஆரம்பிக்கபட்டது.

இவ்வேலைத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியை அளித்துள்ளதால் மட்டக்களப்பு  மாவட்டத்தில் உள்ள 2197 பயனாளிகளை கொண்ட மாங்கேணி சமுர்த்தி வங்கியும் 6268 பயனாளிகளை கொண்ட கல்லாறு சமுர்த்தி வங்கியும் 1130 பயனாளிகளை கொண்ட கரவெட்டி சமுர்த்தி வங்கியும் 4086 பயனாளிகளை கொண்ட பழுகாமம் சமுர்த்தி வங்கியும் 5558  பயனாளிகளை கொண்ட ஏறாவூர் கிழக்கு சமுர்த்தி வங்கியும் 11848 பயனாளிகளை கொண்ட கோறளைப்பற்று மத்தி சமுர்த்தி வங்கியும் 6915 பயனாளிகளை கொண்ட புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கியும் இவ்வேலைத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டு கணனிமயப்படுத்தப்பட்ட சேவையில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 மேலும் கருத்து தெரிவிக்கையில் இம்மாவட்டத்தில் காணப்படும் 20 சமுர்த்தி வங்கிகளுக்கும் 14 மகா சங்கங்களுக்கும் இக்கணணி மயமாக்கல் வேலைத்திட்டத்தை விஸ்தரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு  உரிய உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும்

இத்திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 12 உத்தியோகத்தர்களுக்கு விசேட  கணனி பயிற்சிகள் வழங்கப்பட்டு ஏனைய உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியயளிக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாகவும்  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 


Comments