கொவிட் -19 பாதிக்கப்பட்ட சமுர்த்தி கடனாளிகளுக்கு 4 வீதத்தில் கடன் அறவீடு........
(ஜெயா)
அன்மை காலத்தில் கொவிட்-19 பாதிப்பில் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியது இதில் இலங்கையும் இப்பாதிப்பை எதிர் கொண்டது. மிக முக்கியமாக வறிய மக்கள் தம் வாழ்வாதாரத்தை இழந்து தத்தளித்தனர் இக்கால கட்டத்தில் வறிய மக்கள் தாம் சமுர்த்தி வங்கியில் தம் வாழ்வாதாரத்திற்காக கடன் பெற்றிருந்தனர் இக் கடன்களை செலுத்த இவர்களுக்கு 6 மாதா கால சலுகை தளர்வுகள் வழங்கப்பட்டன. இக்கால கட்டத்தில் இக்கடன் அறவீட்டை சமுர்த்தி வங்கியும் நிறுத்தி வைத்திருந்தது குறிப்படத்தக்க விடயமாகும்.
இத்தளர்வு காலம் 14.09.2020 திகதியுடன் முடிவடைவதால் இக்கடன்களை இத்தளர்வு காலத்தில் மாத்திரம் 4 வீத வருட வட்டியில் அறவிடுமாறு சமுர்த்தி திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட்-19 தளர்வு காலம் 15.03.2020 தொடக்கம் 14.09.2020 வரை இருப்பதால் இக்காலத்திற்கான வட்டி வீதத்தை 4 வீத வருட வட்டியில் அறவிடுவதுடன் சலுகைகாலத்தில் 5 வீத அபராத வட்டியும் அறவிட பட மாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 184 நாட்களுக்கு இச்சலுகை வட்டி அறவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டள்ளது.
மேலதிக விபரங்களுக்கு கீழ் உள்ள சுற்றிக்கையை வாசிக்கவும் கூடுமான வரை இதை சகலருக்கும் பகிரவும்......
Comments
Post a Comment