புதிய EDOவை வரவேற்ற மயிலம்பாவெளி மக்கள்....
மயிலம்பாவெளி கிராமத்திற்கு புதிதாக இடமாற்றலாகி வந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி.விஜயவேணி சஜீவன் அவர்களை மயிலம்பாவெளி வளையாபதி சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினர் 28.08.2020 வரவேற்று அறிமுகம் செய்து கொண்டனர்.
கொவிட் - 19 பின்னர் மக்களை சந்திக்கும் வளையாபதி சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கூட்டம் 28.08.2020 அன்று மயிலம்பாவெளியில் அமைப்பின் தலைவி.மு.சூரியவதனியின் தலைமையில் நடைபெற்ற போதே புதிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி.விஜயவேணி சஜீவன் அவர்களின் அறிமுகம் இடம்பெற்றது. இதன் போது மயிலம்பாவெளி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் அவர்களும் கலந்து கொண்டு தடைப்பட்டிருக்கும் கடன் அறவீடுகள், புதிய கடன் வழங்கள், சிறு குழு சேமிப்பு, வாழ்வாதார உதவிகள் பற்றி கலந்துரையாடியதுடன் புதிய உத்தியோகத்தரையும் அறிமுகம் செய்து வைத்தார். இதன் போது உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் இது வரைக்கும் தான் அலுவலகத்தில் பணிபுரிந்ததாகவும் மயிலம்பாவெளி கிராமத்தில் தான் தான் கள உத்தியோகத்தராக கடயாற்ற உள்ளதாகவும் தன்னுடன் இனைந்து பணியாற்றுமாறு அனைவரையும் அன்புடன் அழைப்பதாக தெரிவித்தார்.
Comments
Post a Comment