நீண்ட காலத்தின் பின் மயிலம்பாவெளியில் ஒன்று கூடிய சமுர்த்தி பயனுகரிகள்.....
கொவிட் -19 காரணமாக தடைப்பட்டிருந்த சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் கூட்டம் 26.08.2020 அன்று மயிலம்பாவெளியில் சமுர்த்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கடந்த பங்குனி மாதத்தில் இருந்து கொவிட் -19 காரணமாக தடைப்பட்டிருந்த சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் செயற்பாடுகள் இம் மாதம் 26ம் திகதி முதல் மயிலம்பாவெளியில் ஆரம்பிக்கப்பட்டது. விநாயகபுரத்தில் சிலப்பதிகார சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கூட்டம் தலைவி ஞா.கோகிலவதனியின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மயிலம்பாவெளி சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் கூறுகையில் தடைப்பட்டிருக்கும் கடன் அறவீகள் பற்றியும், புதிதாக கடன் பெறுவது பற்றியும் கலந்துரையாடியதுடன் இனி வரும் காலங்களில் எவ்வாறான செயற்பாடுகளை செயற்படுத்துவது என்பன பற்றியும் கலந்துரையாடினார். சுமார் 90 பேர் கொண்ட இவ்வமைப்பில் 40 பேர் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment