சமுர்த்தி ஆதார அட்டை வழங்கி வைப்பு.......
மயிலம்பாவெளி கிராமத்தில் சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனுகரிகளுக்கான சமுர்த்தி ஆதார அட்டை 11.08.2020 அன்று ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் வைத்து ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி பயனுகரிகள் பயனடையும் வகையிலும் சமுர்த்தி பயனுகரிகளின் பணியை சிரமமின்றி துரிதப்படுத்தும் வகையிலும் செய்யப்பட்ட இவ் ஆதார அட்டையை மயிலம்பாவெளி சிலப்பதிகார சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவி திருமதி.ஞானச்செல்வம் கோகிலவதனி முதல் நபராக பெற்றுக் கொண்டார். இவருடன் மயிலம்பாவெளி சிலப்பதிகார சமுதாய அடிப்படை அமைப்பின் செயலாளர் திருமதி பவானி அவர்களும் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசனிடம் இருந்த பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் ஆறுமுகத்தான் குடியிருப்பு வலய உதவியாளரும் எல்லை நகர் கிராம சமுர்த்தி உத்தியோகத்தருமான திரு.பகீரதன் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment