ஒரே பார்வையில் சமுர்த்தி ஆதார குடும்ப விபர அட்டை.......
சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் விபரம் அடங்கிய ஆதார அட்டையை ஆறுமுகத்தான் குடியிருப்பு வலயத்தின் சமுர்த்தி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன்; புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
கொவிட்-19 நிவாரணம் வழங்கும் போது சமுர்த்தி நிவாரணம் பெறும் பயனாளிகளுக்கு தங்களின் சமுர்த்தி சார்ந்த விபரங்கள் தெரியாததன் காரணத்தால் பல இடர்பாடுகளை தாம் மாத்திரமல்ல இலங்கை பூராகவும் எதிர்நோக்கியதை தாம் அவதானித்தால் இதற்கு ஒருதீர்வை பெறும் நோக்குடன் இச்செயற் பாட்டில் தாம் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டார். ஒரு கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தின் விபரத்தை அடிப்படையாக கொண்டு இவ் சமுர்த்தி ஆதார அட்டையை பரீட்சாத்தமாக செய்யப்பட்டுள்ளது. முதலில் மயிலம்பாவெளி கிராமத்தில் பரீட்சாத்தமாக தகவல்களை திரட்டி இப் பணிகளை செய்து முடித்துள்ளதாக தெரிவிக்கின்றார். இவ்வட்டையில் ஒரு சமுர்த்தி நிவாரணம் பெறும் குடும்பத்தின் தகவல்களை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவி பெயர், அவரது அடையாள அட்டை இலக்கம், சமுர்த்தி வங்கி கணக்கிலக்கம், கட்டாய சேமிப்பு இலக்கம், குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை, சமுர்த்தி நிவாரண பெறுமதி, சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்ட ஆண்டு, சமுர்த்தி பயனாளியின் நிரந்தர முகவரி, சமூக பாதுகாப்பு காப்புறுதி இலக்கம், சமுதாய அடிப்படை அமைப்பின் பெயர் மற்றும் இலக்கம், சிறு குழுவின் பெயர் மற்றும் இலக்கம் போன்றவற்றை குறித்து காட்டுவதுடன் அக்கிராமத்தின் சமுர்த்தி உத்தியோகத்தரின் ஒப்பமுடன் முகாமையாளரின் ஒப்பத்துடனும் இதை வெளியிட முயற்சிகளை மேற் கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இவ் ஆதார அட்டையை வழங்குவதன் மூலம் பயனாளிக்கு வழங்கப்படும் சேவை மிக இலகுவாக்கடவுள்ளதாகவும் இவ்வட்டையை எப்போதும் பயனாளி தம் வசம் வைத்திருப்பதன் மூலம் சமுர்த்தி கொடுப்பணவு, சமூக பாதுகாப்பு காப்புறுதி, கட்டாய சேமிப்பு போன்ற விடயங்களை இலகு படுத்தி தன் பணிகளை விரைவாக செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இது ஒரு பரீட்சாத்த நடவடிக்கையே வெற்றி கண்டால் தனது வலயத்தில் உள்ள சகல கிராமங்களுக்கும் செயற்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment