சமுர்த்தி நிவாரணம் பெறும் வறிய குடும்பங்களில் இருந்து க.பொ.த(சாதாரண) தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கான சிப்தொற புலமை பரிசில் உரித்துப்பத்திரம் 28.07.2020 அன்று ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளரினால் மாணவியர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
சமுர்த்தி திட்டம் என்றால் எல்லோர் மனதிலும் ஆழமாக தெரிந்த ஒரு விடயம் சமுர்த்தி முத்திரை என்பது தான். இவ் சமுர்த்தி நிவாரத்தில் 3500/=ரூபாய் 2500/=ரூபாய் 1500/= ரூபாய் மற்றும் 420/=ரூபாய் என நிவாரனம் வழங்கப்படுகின்றது. இவ் நிவாரனத்தில் இருந்து மாதாந்தம் 100 ரூபாய் அறவிடப்பட்டு இக்குடும்பத்தில் பிறப்பு, இறப்பு, திருமணம், மருத்துவம் என நிகழ்வுகள் இடம் பெறும் போது இக்குடும்பத்திற்கான கொடுப்பணவுகள் வழங்கப்படுவதை நாம் யாவரும் அறிவோம். இதில் ஒரு அங்கமாக அக்குடும்பத்தில் கல்வி கற்கும் பிள்ளை க.பொ.த(சாதாரண) பரீட்சையில் சித்தி பெறும் பட்சத்தில் பிரதேச செயலக மட்டத்தில் பெறுபேறுகளை பரிசீலனை செய்து முன்னிலைப்படுத்தி மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு க.பொ.த(உயர்தர) கல்வி முடியும் வரை அம்மாணவருக்கு மாதம் 1500/=ரூபாய் எனும் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இப்புலமை பரிசில் 2019/2021 வரையான காலப்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான உரித்துப்பத்திரம் வழங்கும் நிகழ்வானது 28.07.2020 அன்று ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் நடைபெற்றது இதன் போது ஆறுமுகத்தான் குடியிருப்பு கிராம மாணவிக்கு ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி வலய முகாமையாளர் என்.செந்தூர்வாசன் உரித்துப்பத்திரத்தை வழங்கி வைத்தார். இதன் போது ஆறுமுகத்தமான் குடியிருப்பு சமுதாய அடிப்படை சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவி ரவீந்திரன் ரேனுகா ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி உத்தியோகத்தர் ஜெ.ஜெகதீஸ்வரி, வலய உதவியாளர் நா.பகீரதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment