ஏறாவூர் பற்று சமுர்த்தி பிரிவால் வறிய மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கி வைப்பு...

ஏறாவூர் பற்று சமுர்த்தி பிரிவால் வறிய மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணம் வழங்கி வைப்பு...

வறிய மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்குடன் சமுர்த்தி திணைக்களம் கிராமம் தோறும் பாடசாலைகளில் கல்வி கற்று மாவட்ட, மாகாண மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களை ஊக்குவித்து தேசிய மட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தும் நோக்குடன் அவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்க தீர்மானித்து அன்மையில் நாடு பூராவும் வழங்கி வைத்தது.
 இச் செயற்பாட்டில் 46 மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால் அன்மையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. கொவிட் -19 காரணமாக தடைப்பட்டிருந்த இந்த நிகழ்வு 16.00.2020; முதல் கட்டமாக மயிலம்பாவெளி-தன்னாமுனை 26 மாணவர்களுக்கான உபகரணங்களை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெட்ணம் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
குறிப்பாக தன்னாமுனை புனித வளனார் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகள் தேசிய மட்டத்திற்கு பெண்கள் காற்பந்து போட்டிகளில் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மற்றும் மயிலம்பாவெளி தன்னாமுனை கிராமத்தின் மாணவ மாணவியர் கபடி, வலைப்பந்து, மெய்வல்லுனர் போட்டிகளில் மாகாண மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களாகவே காணப்பட்டனர். இவர்கள் மிகவும் வறிய நிலையில் தம் திறமையை வெளிக் கொணர்ந்தாலும் தமக்கான ஒரு விளையாட்டு உபகரணங்களை கொள்வணவு செய்து விளையாட முடியாத சந்தர்பத்தில் சமுர்த்தி திணைக்களத்தின் திட்டத்தின் மூலம் இவ்வுதவியை தமக்கு பெற்றுத்தந்த  பிரதேச செயலாளர், மற்றும் சமுர்த்தி பிரிவினருக்கு தம் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்கள்.
 இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு தலைமையக முகாமையாளர் திரு.பிறைசூடி, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திரு.கலாதேவன், ஏறாவூர் பற்று பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் மயிலம்பாவெளி-தன்னாமுனை சமுர்த்தி உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.தவநீதன் ஏற்பாடு செய்து நடாத்தி இருந்தார்.























Comments