சமுர்த்தி கௌரவிப்பும் ஆண்டிறுதி நிகழ்வும்....
மயிலம்பாவெளி கிராம சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களான மணிமேகலை மற்றும் அமராவதி சங்கங்களின் ஆண்டிறுதி நிகழ்வும் கௌரவிப்பும் இன்று மிக சிறப்பாக நடாத்தது.
2019ம் ஆண்டு தங்கள் சங்கங்களில் தலைவராக, செயலாளராக, பொருளாளராக கடமையாற்றியவர்களின் சேவையை பாராட்டியும் தங்கள் கிராமத்தில் ஒரு வருட சேவையை பூர்த்தி செய்த சமுர்த்தி உத்தியோகத்தரையும் கௌரவித்ததுடன் ஆண்டிறுதி கொண்டாட்டத்தையும் 02.01.2020 அன்று மணிமேகலை மற்றும் அமராவதி சங்கங்களின் நடாத்தியது. இந்நிகழ்வுக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் திரு.கலாதேவன், மயிலம்பாவெளி கிராம உத்தியோகத்தர் திரு.பாலகிருஸ்ணன் மற்றும் மயிலம்பாவெளி சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ஜெயதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய கருத்திட்ட முகாமையாளர் இக்கிராமத்தில் ஒரு பயனுகரி 10 லட்சம் கடனின் ஊடாக மீன் வியாபாரத்திற்கான வாகனத்தை கொள்வனவு செய்துள்ளதாகவும் இன்னுமொருவர் தேங்காய் வியாபாரம் செய்ய 10 லட்சம் கடன் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார். உங்களுக்கு கிடைத்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் நல்ல சேவையாளர் எனவும் அவர் கடமைக்கு வந்து ஒரு வருடத்தில் பல விடயங்களை உங்களுக்கு செய்துள்ளதை நீங்கள் கூறும் போது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மணிமேகலை சமுர்த்தி சங்க தலைவி திருமதி.ஜெயக்காந்தி, அமராவதி சமுர்த்தி சங்க தலைவி திருமதி.சுமதி மற்றும் இக்கிராமத்தின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஜெயதாசன் அவர்களையும் இரு சங்கத்தாலும் கௌரவிக்கப்படனர். இதன் போது 2019ம் ஆண்டு ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை சமுர்த்தி வங்கியில் வங்கி கட்டுப்பாட்டு சங்கத்தின் தலைவி திருமதி.சிவகெங்கா அவர்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும். இரு சங்கத்தின் பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

Comments
Post a Comment