கற்றல் உபகரணம் வீடு வீடுடாக சென்று வழங்கி வைப்பு.....

கற்றல் உபகரணம் வீடு வீடுடாக சென்று வழங்கி வைப்பு.....

 ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக கற்றல் உபகரணங்களை ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்திற்கு உட்பட்ட வறிய குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கி வைத்தார். இதன் போது ஆறுமுகத்தான்குடியிருப்பு வலய உதவியாளர் திரு.பகீரதன், தயவாய் சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.சிவராசா, மற்றும் மயிலம்பாவெளி சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ஜெயதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வை ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கியில் இருந்து ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.













Comments