சமுர்த்தி சங்கங்கள் கௌரவிப்பு மயிலம்பாவெளியில்....

சமுர்த்தி சங்கங்கள் கௌரவிப்பு மயிலம்பாவெளியில்....

2019ம் ஆண்டு சிறப்பாக செயற்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர். செயலாளர் மற்றும் பொருளார்களின் கௌரவிப்பு நிகழ்வு 2020.01.08 அன்று மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் பலநோக்கு கட்டிடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இவ்விபுலானந்தா கிராமத்தில் காணப்படும் நளவென்பா, இளஞ்சுடர், சுடர்ஒளி சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பில் 2019ம் ஆண்டு செயற்பட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் கௌரவிக்கப்பட்டதுடன் ஒரு வருடத்திற்கு முன் இக்கிராமத்தை பொறுப்பேற்று தற்போது சிறப்பாக வழிநடத்தும் சமுர்த்தி உத்தியோகத்தரையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் விபுலானந்தபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் விபுலானந்தபுர மாதர் அபிவிருத்தி சங்க தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய விபுலானந்தபுர மாதர் அபிவிருத்தி சங்க தலைவி தற்போது தான் இக்கிராமத்தில் சமுர்த்தியின் அடிப்படை தகவல்கள் தெரிவதாகவும் தற்போது கிராமத்தை பொறுப்பேற்ற சமுர்த்தி உத்தியோகத்தர் மாதாந்தம் தவறாமல் கூட்டங்களை நடாத்துவதாகவும் குழுக்களை இனம் காட்டி தந்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன் இக்கிராமத்தில் முதலில் 5 முத்திரைகள் மாத்திரமே இருந்தது இவர் வந்த பிறகு தான் தற்போது இக்கிராமத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட சமுர்த்தி முத்திரைகள் கிடைக்கப்பெற்றதை பெருமையாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய விபுலானந்தபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உரையாற்றுகையில் தான் இவ்வருடம் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சமுர்த்தி வேலைத்திட்டம் தற்போது சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்தார்.


































Comments