2020 வருட ஆரம்ப நாளில் கட்டுப்பாட்டு சபை கௌரவிப்பு....

2020 வருட ஆரம்ப நாளில் கட்டுப்பாட்டு சபை கௌரவிப்பு....

ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் 2019ம் ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட சமுர்த்தி கட்டுப்பாட்டு சபையினை 2020ம் ஆண்டின் ஆரம்ப நாளில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வு ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கி முகாமையாளர் திரு.செந்தார்வாசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கிச்சங்கத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு.இராசலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கியின் செயற்பாடுகள் யாவும் மிகச்சிறப்பாக  இருப்பதாகவும் இதற்கு முகாமையாளர் திரு.செந்தூர்வாசனின் அனுகுமுறையே காரணம் எனவும் இங்கிருக்கும் உத்தியோகத்தர்கள் சிறப்பாக செயற்படுவதாகவும் கூறினார்.
  இதன் போது 2019ம் ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட  சமுர்த்தி கட்டுப்பாட்டு சங்கத்தின்  தலைவி மற்றும் உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் புதிய உறுப்பினர்களும் வரவேற்றகப்பட்டனர்.



















Comments