சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட்டதற்கு நன்றி கூறும் மக்கள்.....


தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ள காரணத்தால் மாத இறுதி பணிகள், மற்றும் ஆண்டிறுதி பணிகள் சமுர்த்தி வங்கிகளில் நடைபெற்ற வருகின்ற போதிலும் ஆறுமுகத்தான் குடியிருப்பு வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் வெள்ள அனர்த்தங்களை பார்வையிட்ட போது கொடுத்த வாக்குறுதியின் பிரகாரம் மக்களுக்கான சமுர்த்தி நிவாரண கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
  இதன் பிரகாரம் சமுர்த்தி நிவாரணத்தை பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் மற்றும் வங்கி உத்தியோகத்தர்களுக்கு தங்கள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.


Comments