வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி மக்களுக்கு இடர் கடன்.......

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி மக்களுக்கு இடர் கடன்.......

மட்டக்களப்பில் அடைமழை  காரணமாக சகல மக்களும் பாதிக்கப்பட்டு பொதுக்கட்டிடங்கள், பாடசாலைகள் என தஞ்சம் புகுந்துள்ளனர். ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி கிராமத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமைகளை அவதானித்த ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக இடர் கடன்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
  சமுர்த்தி திட்டத்தில் இயற்கை அனர்த்த காலத்தில் மக்களுக்கு உதவியளிக்கும் ஒரு கடன் திட்டமாக இடர் கடன் திட்டம் காணப்படுகின்றது. இதன் அடிப்படையில் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வலயத்தில் 13 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்றது. இங்கு வாழும் மக்கள் தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை பார்வையிடுவதற்காக இன்று 05.12.2019 சென்ற ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் திரு.செந்தூர் வாசன் மக்களின் நிலையை கேட்டறிந்த போது தொழில் செய்ய முடியாதுள்ளதாகவும் வேலை ஒரு இடமும் இல்லாததால் மிகவும் கஸ்டமான நிலையில் உள்ளதாக சமுர்த்தி பயனுகரிகள் முறையிட உடனடியாக தங்களுக்கு இடர் கடன்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதற்கேற்ப நாளை முதல் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மயிலம்பாவெளி சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடமும் வலய உதவியாளர் திரு.பகீரதனிடமும் தெரிவித்தார்.








Comments