சமுர்த்தி முத்திரை நிவாரணம் தொடர்ந்தும் வழங்கப்படும்....

சமுர்த்தி முத்திரை நிவாரணம் தொடர்ந்தும் வழங்கப்படும்....

வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனுகரிகளுக்கு சமுர்த்தி முத்திரைக்கான கொடுப்பணவு தினமும் வழங்கப்படவுள்ளதாக ஆறுமகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தெரிவித்துள்ளார்.
05.12.2019 அன்று மயிலம்பாவெளி வலையாபதி சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டதன் போது மேற்கண்டவாறு கூறினார். சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் வருடாந்த புதுப்பித்தல் கூட்டத்தில் கலந்து கொண்டு புதிய நிர்வாக தெரிவில் ஈடுபட்டதுடன் 2019ம் ஆண்டில் சிறப்பாக செயற்பட்ட தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர்களை கௌரவித்தல் நிகழ்வில் கலந்து கொண்ட வங்கி முகாமையாளர் கூறியதாவது நீங்கள் எல்லோரும் இவ் அடை மழை காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதை என்னால் அவதானிக்க முடிகின்றது. சமுர்த்தி வங்கியில் ஆண்டிறுதி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் நாங்கள் உங்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் சமுர்த்தி நிவாரணத்தை தொடர்ச்சியாக வழங்க முடிவெடுத்துள்ளோம். ஏன் என்றால் நீங்கள் அன்றாட கூலி வேலை செய்பவர்களாகவே காணப்படுகின்றீர்கள் பலருக்கு வேலை கிடைப்பதும் அரிதாகவே காணப்படுகின்றது எனவே எம்மால் முடிந்தவரை எனது ஊழியர்களுடன் இணைந்து நான் செயலாற்றுவேன் என கூறியதுடன் உங்களுக்கான இடர் கடன்களும் வழங்கப்படவுள்ளதாக கூறினார்.














Comments