சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு....

சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு....

ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி வலயத்தில் கடமையாற்றி இவ்வருடத்தில் இடமாற்றலாகி சென்ற சமுர்த்தி உத்தியோகத்தர்களை அவர்களின் சேவையின் நிமித்தம் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு 30.11.2019 அன்று ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கி வலய முகாமையாளர் திரு.செந்தூர்வாசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி தலைமையக முகாமையாளராக கடமையாற்றிய திரு.செல்வநாகம் ஜெயராஜா, ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளராக கடமையாற்றிய திருமதி.ரதி சிறிதரன் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி நிவாரன விடய லிகிதர் திருமதி.சந்தனசாமி சாந்திமேரி ஆகியோரும் கௌரவிக்க அழைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் ஆறுமுகத்தான் குடியிருப்பு சமுர்த்தி வங்கியில் முகாமையாளராக கடமையாற்றிய திருமதி.சியாந்தினி கமல்ராஜ் அவர்களும் சமுர்த்தி வங்கியில் கடமையாற்றிய திருமதி.செல்விபுஸ்பா ராஜேந்திரகுமார், திருமதி ராஜேஸ்வரி உதயணன், திருமதி.ஜெகனி சுந்தரகோஸ், திரு.பத்தினியர் சிறிதரன் ஆகியோரும். சமுர்த்தி வலயத்தில் கடமையாற்றிய திரு.இராமையா விஸ்வநாதன், திரு.முத்துப்பிள்ளை திருமால், திரு.விநாயகமூர்த்தி காந்தியசீலன், திருமதி.சிவசோதி அழகேந்திரன், திருமதி.ஜானகி நடராஜா, திருமதி.கார்மேல் ரவிசங்கர், திரு.சபாரெத்தினம் காங்கேயன் மற்றும் செல்வி தியாகராசா டிலக்சி ஆகியோரும் கௌரவிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன் போது தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் வேடிக்கை விளையாட்டுகளில் பங்குபற்றி தாங்கள் பணியாற்றிய நண்பர்களுடன் துக்கத்துடன் விடைபெற்றுச்சென்றனர்.




















Comments